தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சைலேந்திர பாபு சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். அவர் தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் விடுமுறை நாட்கள் தவிர்த்து, அனைத்து நாட்களிலும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கலாம் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார் . திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11.30 மணிக்கு பார்வையாளர்கள் அறையில் பொது மக்கள் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தினர் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.