பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ திமுகவினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து பொள்ளச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர், மகாலிங்கபுரம் காவல் நிலையத்திலும், டிஎஸ்பியிடமும் புகார் மனுவை கொடுத்தனர். அதேபோல் கோவையிலும் ஏராளமான புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
திமுகவினரை வானதி கொச்சைப்படுத்தி விட்டார். பொதுவிடம் என்று கூட பார்க்காமல், அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.