Skip to content
Home » தமிழ்நாட்டுடன் சண்டையிட விருப்பம் இல்லை….. கர்நாடக துணை முதல்வர்

தமிழ்நாட்டுடன் சண்டையிட விருப்பம் இல்லை….. கர்நாடக துணை முதல்வர்

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  இந்த நிலையில் மேகதாது விவகாரம் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.

மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து பேசுவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) டில்லி செல்கிறார். அவர் நாளை (புதன்கிழமை) மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேச உள்ளார். மேகதாது விகாரம் தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதில், தமிழ்நாடு நமது சகோதர மாநிலம், அவர்களிடம் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது.இங்கு உள்ளவர்கள் அங்கு வேலை பார்க்கிறார்கள். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இங்கு வேலை பார்க்கிறார்கள். எனவே எந்த ஒரு விஷயத்திற்காகவும் இரு மாநிலமும் சண்டையிட கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *