திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து நாள்தோறும் வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வருகை அதிகரிப்பால் மேலும் விமான சேவை அதிகரிக்ப்பட உள்ளதால், விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
விரிவாக்கத்திற்கு நிலம் கையப்படுத்துதல் பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் நடந்து வருகிறது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையப்படுத்துதல் தொடர்பான பணிகளை மாவட்ட கலெக்டர் ர் பிரதீப் குமார், இன்று நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்..