மிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவில் சட்டம் இயற்றப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.
மேலும் உரிய சட்ட விதிமுறைகளின் அடிப்படையிலும், 32 பேர் தமிழகத்தில் இந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு தற்கொலை செய்துள்ள நிலையில் அவசியம் ஏற்பட்டதன் அடிப்படையில் தான் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது என பதில் மனுவில் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி அமர்வு, தமிழக அரசு சார்பில் இறுதி வாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் தற்கொலை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்திருப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்தும் இறுதி விசாரணையை ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.