அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்டம் இணைய குற்ற காவல் ஆய்வாளர் வாணி தலைமையிலான, இணைய குற்ற காவல்துறையினர், இணைய குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து,ரொக்கப்பணம், மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தமைக்காகவும், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வகுமார், வாகன தணிக்கையின் போது, கூட்டுக் கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தமைக்காகவும், ஜெயங்கொண்டம் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிவேல் தலைமையிலான க்ரைம் டீம் காவல்துறையினர், கொள்ளை மற்றும் திருட்டு வழக்கில்,
தேடப்படும் குற்றவாளிகளின் தகவல்களை சேகரித்து, அவர்களை கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்ய உதவி புரிந்தமைக்காகவும், இவர்களின் பணியை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, வெகுமதி அளித்தார்கள். இந்நிகழ்ச்சியின் போது, இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி, துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் சங்கர் கணேஷ், ரவிச்சந்திரன், வெங்கடேசன், மற்றும் சுரேஷ்குமார் உடனிருந்தனர்.