திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு ஆண் பயணி உடலில் மறைத்து தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பயணியை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் 988.900 கிராம் எடையுள்ள பசை வடிவிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவற்றை உருக்கியபோது 846.500 கிராம் எடையுள்ள தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை எடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்ததோடு அவற்றின் மதிப்பு சுமார் 46 லட்சத்து 37 ஆயிரத்து 127 ரூபாய் என மதிப்பிடப்பட்டது. மேலும் அந்த ஆண் பயணியிடம்அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.