தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 92, 500 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா தெரிவித்துள்ளார். … இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டம் இந்த ஆண்டு 70 ஆயிரம் ஏக்கருக்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்காக ரூ. 21 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டுமே மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 2½ ஏக்கருக்கு மானியத்தில் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. தற்போது உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 150 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 92, 500 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் வேளாண் பொறியியல் துறை மூலம் 236 பவர் டில்லர்களும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்று இவ்வாறு தெரிவித்தார்.