Skip to content

மக்னா விசிட் …அச்சத்தில் விவசாயிகள்…

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் கடந்த மூன்று மாதங்களாக கிருஷ்ணகிரியில் பிடித்து  கொண்டு வந்த மக்னா டாப்சிலிப் வனபகுதியைவிட்டு தம்மபபதி வழியாக வனப்பகுதி ஒட்டி மக்னா அருகிலுள்ள விவசாய நிலங்களில் உள்ள மாங்காய் மரம் 150க்கும், தென்னைமரம் 50க்கும் மேலும் மாலை நேரம் வெளியேறி  அதிகாலை வரை விளை நிலங்களை சேதப்படுத்த வருகிறது,விவசாய நிலங்களுக்குள் வராமல் இருக்க டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து   கும்கிகள்     ராஜ வரதன், சுயம்பு என இரண்டு யானைகள் மக்னாவை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று அதிகாலை தேவராஜ் என்பவரது தோட்டத்து கேட்டை உடைத்தும் வீட்டின் முன்பு இருந்த வாழை மரத்தை சேதப்படுத்தியும் பாகற்காய் தோட்டத்து கம்பி வேலிகளை உடைத்து உள்ளது,50 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் குடியிருந்து வருவதாகவும் தற்போது மக்னா நடமாட்டத்தால் அச்சமாக உள்ளது,தோட்டத்தில் பகலில் வேலை செய்ய முடியவில்லை இரவில் வெளியேறிய நடமாடும் மக்னா தற்போது பகலில் தோட்டங்களில் உலா வருகிறது,மூன்று மாதங்களாக மாங்காய் பறிக்கும் சீசன் இருந்ததால் மக்னா மாமரங்கள் உள்ள பகுதிகளில் அதிகமாக நடமாட்டம் இருந்தது,தற்போது    சரள பதி சுற்றியுள்ள விவசாயிகள் மின் வேலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், மக்னாவை வனத்துறையினர் பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் இல்லை எனில் கும்கியாக மாற்ற வேண்டும் என வனத்துறையினருக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைக்கின்றனர். (மேலும் கும்கிகள் கட்டி வைத்திருக்கும் இடத்தில் யானையின் சாணத்தில் பிளாஸ்டிக் கழிவு கலந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *