மயிலாடுதுறை மாவட்டம், வள்ளாலகரம் ஊராட்சி பகுதியில் இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா மற்றும் மருத்துவர்கள் தின விழா மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை தலைவர் மருத்துவர் பாரதிதாசன் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் மருத்துவர் இரத்தின அருண்குமார் புதிய கட்டிட மதிப்பீடு பகிர்வு உரையாற்றினார்.
இந்திய மருத்துவக் கழக கிழக்கு மண்டல துணைத் தலைவர் மருத்துவர் கோவிந்தராஜன் மற்றும் மூத்த மருத்துவர்கள் முன்னிலை வகித்தனர். ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்திய மருத்துவ கழக புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கட்டிட கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து
நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உள்ளிட்டோர் மருத்துவர்களின் பணியை பாராட்டி
சிறப்புரையாற்றினர். மருத்துவத்துறையில் சேவை ஆற்றி வரும் மூத்த மருத்துவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை கிளை செயலாளர் மருத்துவர் சௌமித்யாபானு நன்றியுரையாற்றினார். ஊடகவியலாளர் அகஸ்டின் விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.