நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் வரும் 20ம் தேதி தொடங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 20ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ந்தேதி வரை நடைபெறும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் தமிழக கவர்னர் ரவியின் அத்துமீறல்கள், மற்றும் மணிப்பூர் கலவரம், உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்பதால் கூட்டம் பரபரப்புடன் இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.