இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் கோப்பையினை அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் கலாநிதி வீராசாமி தமிழச்சி தங்க பாண்டியன், எம்எல்ஏ தாயகம் கவி, மோகன் ,வேலு, ஜட்ரீம் மூர்த்தி . பிரபாகர்ராஜா, ஜோசப் சாமுவேல் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் , அதுல்ய மிஸ்ரா , தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மதிப்பிற்குரிய துணை மேயர் மகேஷ் குமார், மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத்தலைவர் அசோக்சிகாமணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.