திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் கலையரசன். மறவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கொசு ஒழிப்பு பணியாளராக பணியாற்றிவந்த அவர் கடந்த 26ம் தேதி மணப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் இந்நிலையில் மருந்து, மாத்திரைகளை, தீ வைத்து எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவரின் சட்டையில் திடீரென தீ பற்றியுள்ளது. இதையடுத்து அவரை அங்குள்ள ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 60 விழுக்காட்டிற்கு மேல் தீ காயங்கள் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.