Skip to content

விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்னைக்கு புறப்பட்ட தஞ்சை மாணவர்கள்…

  • by Authour

2022 – 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கபடி, சிலம்பம், இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் 31.01.2023 முதல் 25.02.2023 வரை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரி மாணவு, மாணவியர்கள், பொதுப்பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா 19.06.2023 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம், கரிகாற்சோழன் கலையரங்கத்தில் நடைப்பெற்றதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பரிசளிப்பு விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி சிறப்பித்தார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் வீரர் வீராங்கனைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நேர்வில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் 30.06.2023 முதல் 25.07.2023 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த மாணவ, மாணவியர்கள், வீரர், வீராங்கனைகள் மொத்தம் 694 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

முதலாவதாக 30.06.2023 முதல் 04.07.2023 வரை பள்ளி மாணவ, மாணவியர்கள் கபடி, வாலிபால் மற்றும் பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கான சிலம்பம் விளையாட்டுப் போட்டிகளிலும் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 65 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அன்னை சத்யா விளையாட்டரங்கிலிருந்து அரசு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அப்பேருந்தினை துவக்கி வைத்தார். மேலும், அவர்களுடன் போட்டிக்கு அழைத்துச் செல்லும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாவட்ட பயிற்றுநர்கள் உடனிருந்து இப்பயணத்தை சிறப்பாக துவக்கி வைத்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *