தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்ரூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே நிலவி வந்த இடத்தகராறு காரணமாக இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்(29), மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் (55) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ராணுவ வீரர் சுரேஷ்(27) என்பவர் தப்பி ஓடினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இடத்தகராறு காரணமாக இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.