முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட திமுக சார்பில், திமுக மாநகர் செயலாளர் கனகராஜ் தலைமையில் டாக்டர் கலைஞர் கருணாநிதி 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
போட்டியில் ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்து
கொண்டனர் இதில் முதல் பரிசை 7500 ரூபாய் கிருஷ்ணாபுரம் அணி வென்றது, 6000 ரூபாய் இரண்டாவது பரிசை வெற்றி விநாயகா பள்ளி அணி தட்டி சென்றது, மூன்றாம் பரிசாக 4000 ரூபாய், நான்காம் பரிசாக 4000 ரூபாய் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுகவினர் மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.