Skip to content

”மாமன்னன்” திரைவிமர்சனம்…. அசுரனை மிஞ்சிட்டார்…. ரசிகர்கள் பாராட்டு….

  • by Authour

கர்ணன், பரியேறும் பெருமாள் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். உதயநிதியின் கடைசி படம் இது என்பதால் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி வடிவேலு, பகத் பாசில் உள்பட ஏராளமான முன்னணி நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.

மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று பக்ரீத் விடுமுறையை ஒட்டி உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. மாமன்னன் படத்தின் முதல் காட்சியை வெளிநாட்டில் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை டுவிட்டரில் அடுத்தடுத்து பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அந்த விமர்சனங்களை தற்போது இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வரலாற்று பொக்கிஷம்

ஒடுக்கப்பட்டவனின் வலிகளையும் சமத்துவத்தின் வேர்களையும் விளுமியங்களின் எல்லைகளையும் அழுத்தமாக முற்றோப்பு மாயைகளின் வீழ்ச்சிகளையும் தீண்டாமை ஆழ்ந்த கருவுருவாக்கங்களையும் அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் இந்தப்படம் ஒரு வரலாற்று பொக்கிஷம் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இண்டர்வல் சீன் சூப்பர்

மாமன்னன் மூலம் மாரி செல்வராஜ் அற்புதமான கதையை சொல்லி உள்ளார். இண்டர்வல் சீன் சூப்பர். இசையால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான், படம் முழுக்க வடிவேலுவும், பகத் பாசிலும் சிறப்பாக நடித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்டர் பீஸ்

விஸ்வரூபமெடுக்கும் ஒடுக்குமுறையை மாரி போன்ற ஒரு இயக்குனர் எப்படி படமாக்குவார் என்று நினைக்க வேண்டாம். முதல் பிரேமில் இருந்தே பிரம்மிக்க வைத்துள்ளார். அவரது எழுத்து மிகவும் உன்னதமானது. அதைவிட முக்கிய காட்சிகளை அவர் இயக்கிய விதம் அவ்வளவு அழகு. இதுவரை ஒடுக்குமுறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படங்களில் இது சிறப்பான படமாக உள்ளது. கதாபாத்திரங்கள், எழுத்து மற்றும் இயக்கம் என ஒரு சிறந்த மாஸ்டர் பீஸ் படைப்பை கொடுத்திருக்கிறார்.

அசுரனை மிஞ்சிட்டான்

மாமன்னன் படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் மாமன்னன் படம் அசுரனை மிஞ்சி நிற்கிறான் என பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

வடிவேலு வெறித்தனம்

மாமன்னன் என்கிற ஒரு பிரம்மிப்பூட்டும் படத்தை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ். உதயநிதிக்கு இது கம்பேக் படம், அற்புதமாக நடித்துள்ளார். வடிவேலு வேறலெவல். தலைவி கீர்த்தி சுரேஷ் நடிப்பு கவர்கிறது. இண்டர்வல் மாஸ் ஆக உள்ளது. பின்னணி இசை பக்கா. கிளைமாக்ஸில் வடிவேலு வெறித்தனமா நடிச்சிருக்கார் என பாராட்டி உள்ளார்.

தரமான ஒளிப்பதிவு

மாமன்னன் முதல் பாதி சூப்பர், இண்டர்வல் சீன் வெறித்தனம், இரண்டாம் பாதி ஆவரேஜ் தான். மொத்தத்தில் ஓகேவான படமாக உள்ளது. வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிப்பு வேறலெவல், ரகுமானின் பின்னணி இசை சூப்பர். ஒளிப்பதிவு தரமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

 

தெறி

ஐயா வடிவேலுவுக்கு இது வாழ்நாளில் மறக்கமுடியாத பர்பார்மன்ஸ். பகத் பாசில் வேறரகம். உதயநிதி சிறப்பு. கீர்த்தி சுரேஷ் நன்றாக நடித்துள்ளார். முதல் பாதியை தெறிக்கவிட்டுள்ள மாரி செல்வராஜ், இரண்டாம் பாதியில் ஏமாற்றம் அளித்துள்ளார். மாண்புமிகு அவைத்தலைவர் சீன் மாஸ் ஆக உள்ளது.

வேறலெவல்

வடிவேலு என்ன ஒரு அற்புதமான நடிகர். உதயநிதி, பகத் பாசில் என ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். இசையும், ஒளிப்பதிவும் படத்தை வேறலெவலுக்கு கொண்டு சென்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் சம்பவக்காரன்

சமூக நீதியையும், சமத்துவத்தையும் பேசுகிறது மாமன்னன். வடிவேலு வில் ஆகவும், உதயநிதி அம்பாகவும், கீர்த்தி சுரேஷ் அதனை எய்துபவராகவும் இருக்கிறார். அவர்களின் இலக்காக பகத் பாசிலின் ரத்னவேல் கேரக்டர் உள்ளது. மாரி செல்வராஜ் நீ ஒரு சம்பவக்காரன் என புகழ்ந்துள்ளார். மேலும் ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடியும், பாராட்டியும் வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!