திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற ஆனி மாதம் 17-ம் தேதி (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் என்பதால் அன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது.
மறுநாள் ஆனி மாதம் 18-ம் தேதி (03.07.2023) திங்கள்கிழமை அன்று மாலை 4.30மணி முதல் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்யலாம். மேலும் மூலவருக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால் அது உலரும் வரை பெருமாளுக்கு மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க இயலும் என கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.