திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர், குழுவின் துணைத்தலைவர் பிரதீப் குமார், ஊராட்சிக்குழுத் தலைவர் இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் புதிய திட்டக்குழுவினை ஏற்படுத்தி அதில் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து மாவட்ட திட்டக்குழு இயங்குவதற்கு வழிவகை செய்திட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களை கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தும், மாவட்ட திட்டக்குழுவின் பணிகள் பற்றிய விவரங்களை திட்டக்குழு உறுப்பினர்களுக்கும், மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் தெரிவித்தும், 2022-2023-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட மற்றும் 2023-2024-ம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ள திட்டப்பணிகள் குறித்து அறிக்கையாக பெற்று அடுத்த கூட்டத்தில் விவாதம் செய்வது எனவும் விவாதமின்றி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி, மாவட்ட ஊராட்சி செயலர் ஆறுமுகம், திட்டக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.