Skip to content
Home » குண்டர் சட்டத்திற்கு கையெழுத்து போடும் அதிகாரம் இனி கலெக்டர்களுக்கு இல்லை…

குண்டர் சட்டத்திற்கு கையெழுத்து போடும் அதிகாரம் இனி கலெக்டர்களுக்கு இல்லை…

திண்டுக்கல் மாவட்டம் பொன்னுமாந்துரையைச் சேர்ந்ததவர் தமிழழகன். இவர் பொது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் கைது செய்ய 2022 ஆகஸ்ட் 7 ல் கலெக்டர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழழகன் தரப்பில், கைது உத்தரவில் விதிமீறல் உள்ளது. கருணை மனுவை அறிவுரைக் குழுமம் உரிய நேரத்தில் பரிசீலிக்கவில்லை. கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த முறை இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, குண்டர் சட்டத்தில் கைது செய்ய பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கலெக்டர்களுக்கு பணிச்சுமை அதிகம். இச்சூழலில் குண்டர் சட்ட கைது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டியுள்ளது. பதிலாக போலீஸ் ஐ.ஜி.,கள் கைது உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் வழங்கும் வகையில் குண்டர் சட்டத்தில் திருத்தம் செய்தால் என்ன? இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஜூன் 28 ல் தெளிவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அச்சமயம் குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நீதிமன்றத்தில் உள்துறை செயலாளர் அவகாசம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், அதிகாரத்தை ஆட்சியர்களிடம் இருந்து டிஜிபி அல்லது காவல் ஆணையர்களுக்கு வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, சட்டத்திருத்தம் மேற்கொள்ள 4 வாரம் அவகாசம் வழங்கி உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் அமர்வு ஒத்திவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!