திருச்சி, துவாக்குடி அருகே உள்ள திரு நெடுங்களநாதர் கோவிலில் ஆனி மாத ஆஷாட நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வரக்கூடிய ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம். அதன்படி திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில்
செவ்வாய்கிழமையான இன்று வராகி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவிய பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, தேன், அரிசி மாவு உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்கள் மற்றும் கலசநீர் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வராஹி அம்மனுக்கு மலர்கள் , அணிகலன்கள் மற்றும் கவசங்களால் அலங்கரிக்கப்பட்டு, மூல மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வராகிஅம்மனை வழிபட்டனர்.