திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் வருவாய் கிராமத்தில் மத்திய திட்டம் வேளாண்மை துணை இயக்குனர் திருமதி சாந்தி வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட செயல்விளக்க திடல், விதை பண்ணை வயல், பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டார்.
பிச்சாண்டார்கோயில் வருவாய் கிராமத்தில்
வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு செயல்விளக்க
திடல், விதை பண்ணை வயல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடைப்பெற்றது.இத் த பணிகளை மத்திய திட்டம் வேளாண்மை துணை இயக்குனர் திருமதி சாந்தி பார்வையிட்டார்.
மேலும் விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள், பேட்டரி தெளிப்பான் ஆகியவைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் வட்டாரத்தின் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி வேளாண்மை உதவி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்து இருந்தார்.