திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் உள்ள வெங்கடாசலபுரத்தில் உள்ள எஸ்பிஜி மெஷின் துவக்கப்பள்ளி மற்றும் ஆலம்பாக்கத்தில் உள்ள தோமையார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்.
புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெனிபர் ஜெனிவா ஹென்றி பிரபா இவர் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஆலம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் ஒன்றிய கவுன்சிலர் ஜெனிபர் ஜெனிவா ஹென்றி பிரபா தனது பிறந்த நாளை முன்னிட்டு வெங்கடாசலபுரத்தில் த்தில் உள்ள SPG மிஷின் துவக்க பள்ளி மற்றும்
ஆலம்பாக்கத்தில் உள்ள தோமையார் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தேவையான கல்வி உபகரண பொருள்களை வழங்கினார்.
.இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஜான் பெற்றுக் கொண்டார். ஆசிரியைகள் செல்லராணி, ஈவிலின் ஆகியோர் நன்றி கூறினர்.