கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் அரசு தாய் சேய் மருத்துவமனையில் தேசிய கரூர் டைமண்ட்,கரூர் மாநகராட்சி, கரூர் ரோட்டரி எங்ஜென் மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார். இந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். இந்த நிகழ்வில் JFP. அமைப்பின் தலைவர் விஜயன்,JC அமைப்பின் செயலாளர் சூரியகுமார், பொருளாளர் பிரதீப்,JFM அமைப்பின் தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்த அனைவருக்கும் உணவு பொருட்கள் அடங்கிய கிட் வழங்கி ரத்த தானம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.