திருச்சி கே.கே நகர் காவல் நிலைய எஸ்.ஐ உமா சங்கரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கூறி விசாரணைக்காக நகைக் கடை உரிமையாளர் ரோஜா ராஜசேகர் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சி கே.கே நகர் குற்ற பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்று துன்புறுத்தியதில் மன உளைச்சலில் இருந்த ராஜசேகர் நேற்று முன் தினம் இரவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றப்பட்டுள்ளார்.