திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் கிழக்கு பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்ததால் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது – இந்நிலையில் கடந்த மாதம் முழுமையாக பணிகள் முடிந்து பாலம் திறக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மாநகர மக்கள் அரிஸ்டோ மேம்பாலத்தில் திண்டுக்கல் – திருச்சி மார்கம் மற்றும் வடக்கு பகுதியை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலம் இரு வழி பாதையாக மாற்றுவதற்கான முன்னோட்டத்தை மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா போக்குவரத்து துறை காவலர்களுடன் இன்று மேற்கொண்டார்.