தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கான பருவ தேர்வு ( ஏப்ரல் 2023) முடிவுகளை தேர்வு நெறியாளர் மலர்விழி வழங்கினார்.
இதனை தொடர்ந்து அனைத்து துறை தலைவர்கள் முன்னிலையில் கல்லூரி முதல்வர் ஜான்பீட்டர் வெளியிட்டார். எனவே மாணவிகள் தங்களின் தேர்வு முடிவுகளை www.kngac.ac.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.