திருச்சி மாவட்டம், துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நேற்று தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. தலைவராக தில்லைநாயகமும் செயலாளராக துரைராஜ் மற்றும் பொருளாளர் ஆனந்த் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ரொட்டேரியன் ஆளுநர் ராஜகோவிந்தசாமி, சௌடாம்பிகா கல்வி குழுமம் தலைவர் ராமமூர்த்தி, மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம், மாவட்டத் துணை ஆளுநர் கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 2023 மற்றும் 24 ஆண்டுகான நிர்வாக குழு உறுப்பினர்கள்,சங்க இயக்குனர்கள், திட்ட குழு உறுப்பினர்கள், சிறப்புத்திட்ட செயலாக்க குழுவினர், திட்டங்களுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் ரோட்டரி எஸ்கேபி ஸ்ரீதர் ,ரோட்டரி அம்மன் பேட்டரி கிருஷ்ணகுமார் ரோட்டரி இன்ஜினியர் மணி, ரோட்டரி அசோக் குமார், ரோட்டரி இந்தியன் அச்சகம் ராஜேந்திரன், ரோட்டரி மணிராஜா ஜுவல்லரி மணிராஜா உள்பட ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Tags:திருச்சி