திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் பால்குடம் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் ஆனித் திருமஞ்சனம் விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் தொட்டியம் காவிரி ஆற்றில் புனித நீராடினர் அதனைத் தொடர்ந்து தீர்த்த குடம் பால்குடம் பன்னீர் காவடி விபூதி காவடி சந்தன காவடி அக்னி சட்டி அழகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்து மதுரை காளியம்மனை வழிபட்டனர்.ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு மதுரை காளியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது… ஆனி திருமஞ்சனத்தில் 1008 பேர் தீர்த்தகுடம் அக்னி சட்டி அலகு குத்தி வலம் வந்தனர். 30க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் கலந்து கொண்டு நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மதுரை காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மதுரை காளியம்மனை வழிபட்டனர்.