குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள். இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். நிதித்துறை, வருவாய்த்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
யார், யாருக்கு மகளிர் உரிமைத்தொகை…. முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை
- by Authour