Skip to content

ஏலச்சீட்டு தொகை வழங்காத நிதி நிறுவனத்துக்கு ரூ.1. 60 லட்சம் இழப்பீடு..

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்தவர் ரெங்கநாதன். அரசு ஊழியரான இவர் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் ஏலச்சீட்டு ஒன்றில் 2019ம் ஆண்டு சேர்ந்தார். ஏலத்தின் 2வது மாத்திலேயே கலந்து கொண்டு தனது சொந்த தேவைக்காக சீட்டை ஏலத்தில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு எடுத்தார்.
நிதி நிறுவனத்தின் விதிமுறைகளின்படி ஏலம் எடுத்த 12 நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கப்பட வேண்டும். ஆனால் 1½ மாதங்கள் ஆகியும் பணம் வழங்கப்படவில்லை. இது குறித்து ரெங்கநாதன் கேட்டும், அவருக்கு பணம் கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.

இதையடுத்து ரெங்கநாதன், வக்கீல் செல்வநாயகம் மூலம் தஞ்சை நுகர்வேர் குறைதீர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரெங்கநாதன் கையெழுத்து நேரில் ஆங்கிலத்திலும், அரசு அடையாள அட்டையில் தமிழிலும் உள்ளது என்று கூறி பதில் அளித்தனர். மேலும் கொடுத்த பணத்தை வாடிக்கையாளர் பெற முன்வரவில்லை என்றும் கூறினர்.
வழக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திடம் இருந்து, ரெங்கநாதனுக்கு, ஏலத்தொகைய பெற்றுக்கொண்டதாகவும், மீதித்தொகை ரூ.81,843 செலுத்த வேண்டும். இல்லையென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசு அனுப்பினர். பணம் தரவில்லை என வழக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது பணத்தை பெற்றுக்கொண்டததாகவும், மீதி பணம் தரவில்லை என நோட்டீசு அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் (நீதிபதி) மோகன்தாஸ், உறுப்பினர்கள் சுகுணாதேவி, அழகசேன் ஆகியோர் விசாரித்து, ரெங்கராஜனுக்கு, நிதி நிறுவனம் இழப்பீடாக ரு.1 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஏலச்சீட்டுத்தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *