திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் மயான சாலையை சீரமைத்த பொதுமக்கள்.இந்த பணிகளுக்கான பூமி பூஜையும் நடைபெற்றது.
சமயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாகாளிக்குடியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல் வயல் வாய்க்கால்களில் சடலத்தை தூக்கிச் சென்று நல்லடக்கம் செய்து வந்துள்ளனர். பல்வேறு அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாகாளிக்குடி பகுதியில் பாசன வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும், மாகாளிக்குடி கிராமங்களுக்கு சொந்தமான சுடுகாடுகளுக்கு சாலைவசதி செய்து கொடுக்க
வேண்டும், சுடுகாடுகளுக்கு கொட்டகை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி கடந்த 16 ம் தேதி் சமயபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் அரசு அலுவலர்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் மயான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இந்நிலையில் மயான சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைப்பெற்றது.இதனைத் தொடர்ந்து பொதுமக்களே மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.