Skip to content

அமைச்சர் செந்தில்பாலாஜி I.C.U.வில் இருந்து தனி அறைக்கு மாற்றம்…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து முதலில் ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் காவேரி மெடிக்கல் சென்டரில் சேர்க்கப்பட்டார். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோ செய்து பார்க்கப்பட்டதில் அவருக்கு இருதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 21ம் தேதி  அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில்  அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கிய பைபாஸ் அறுவை சிகிச்சை காலை 10 மணி அளவில் நிறைவடைந்தது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். கடந்த 3 நாட்களாக ஐசியூவில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று மாலை 4 வது தளத்தில் உள்ள அறை எண் 435-க்கு மாற்றம் செய்யப்பட்டார். தனி அறையில் மாற்றம்  செய்யப்பட்ட செந்தி்ல்பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *