தமிழ்நாடு அரசு மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பண்ணோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான பதிவு செய்ய முகாம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி இடமலைபட்டிபுத்தூர் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட
பயனாளிக்கு பதிவு செய்ய முகாமை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்.கே. என்.நேரு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருன், மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் இருதய பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், இசிஜி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.