Skip to content
Home » புதுகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று (24.06.2023) துவக்கி வைத்தார். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு மருந்து பெட்டகத்தையும் வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா,  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா அவர்கள், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ராம்கணேஷ், ஒன்றிய குழுத் தலைவர் திரு.வி.ராமசாமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!