Skip to content

நடிகை குஷ்பு மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி…

  • by Authour

தமிழ் திரையுலகிற்கு 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம்டைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார். இந்நிலையில், நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *