எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பின்னர் தலைவர்கள் அனைவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ராகுல்காந்தியிடம் பேசிய லாலு பிரசாத், திருமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் விரும்புகிறோம். உங்கள் அம்மா பேச்சை நீங்கள் கேட்பதில்லை என உங்கள் அம்மா என்னிடம் கூறினார். எங்கள் பேச்சை கேளுங்கள். திருமணத்தை உறுதி செய்யுங்கள்’ என்றார். செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல்காந்தியிடம் திருமணம் செய்துகொள்ளுங்கள் என லாலு பிரசாத் கோரிக்கைவிடுத்த நிலையில் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, தற்போது நீங்களும் கூறிவிட்டீர்கள். அது விரைவில் நடக்கும்’ என்றார்.
‘திருமணம் செய்து கொள்ளுங்கள்’.. ராகுலுக்கு லாலு பிரசாத் அன்பு கட்டளை..
- by Authour