தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் படைக்கப்படும் சிறந்த நாவல்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2023ம் ஆண்டுக்கான சிறந்த தமிழக நூல்களுக்கான சாகித்ய அகாடமி விருது டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆதனின் பொம்மை என்ற நூலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழடி ஆய்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆதனின் பொம்மை என்கிற நாவலுக்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலின் மூலம் தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அறிந்துகொள்ள முடியும். இதேபோல், திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்பை எழுதிய எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய யுவ புரஸ்கார் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராம் தங்கம் கூறுகையில், விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல விருதுகள் உதவியாக இருக்கும் என்று கூறினார்.