சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்தில் இருந்து கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.81 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசும் ஒப்புதல் அளித்துவிட்டது. எனவே விரைவில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.