திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் உள்ள இனாம் கல்பாளையம், வலையூர், பாலையூர், அழகியமணவாளம், இருங்களூர், சீதேவிமங்கலம், சனமங்கலம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை சார்ந்த கால்நடை துறை, ஊராட்சி துறை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்களின் துறை சார்ந்த திட்டத்தை விவசாயிகளுக்கு எடுத்து உரைத்தனர். வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி ஜெயராணி, வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா, தோட்டக்கலை அலுவலர் சுரேஷ், துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் பார்த்திபன், பாஸ்கர், ஆனந்த், பாபு, பன்னீர்செல்வம், பாலாஜி, தோட்டக்கலை உதவி அலுவலர் பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.