திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள விவசாயிகளுக்கு லால்குடி வேளாண்மை துறை சார்பில் வெளி மாவட்ட அளவில் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை எண்ணெய் வித்துக்கள் தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ள பயிற்சி அளித்தனர்.
லால்குடி வட்டாரத்தில் இருந்து ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை எண்ணெய் வித்துக்கள் தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ள விருத்தாச்சலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று எள், நிலக்கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை , பூச்சி கட்டுப்பாடு இயற்கை இடு பொருட்களை பயன்படுத்துதல் , எள் ரகம் தேர்வு, பூச்சி நோய்
கட்டுப்பாடு முறைகள் களை மேலாண்மை பற்றி நிலைய . பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர்.மேலும் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் Dr. துரைசாமி ஆராய்ச்சி நிலைய குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக விளக்கி கூறினார்கள். இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் கொப்பாவளி, புதூர் உத்தமனூர், நகர் , நெருஞ்சலகுடி, கோமகுடி,மருதூர் கிராமத்தில் இருந்து பல முன்னாடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்த பயிற்சிக்கான ஏற்பாட்டினை லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார்,வேளாண்மை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட வட்டார மேலாளர் சபரிசெல்வன் , உதவி தொழில் நுட்ப மேலாளர்கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.