தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…. பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் நடைபெற்று வந்தது. இந்த மக்கள் நேர்காணல் முகாமை தொடர்ந்து நடத்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை வருவாய் நிர்வாகப்பிரிவு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.