தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கோவை சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்:- கோவையில் ஆய்விற்காக வந்தோம். தமிழ்நாடு பஞ்சாலை கழகம் மூலம் ஏர் ஜெட் இயந்திரம் பள்ளி மாணவர்களுக்கான 9 லட்சம் மீட்டர் பள்ளிச் சீருடை
உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.ஏர்ஜெட் இயந்திரம் மூலம் உற்பத்தியை பெருக்க என்னென்ன தேவை இருக்கிறது,குறை இருக்கிறது என்பதை நேரில் கேட்டு ஆய்வு செய்துள்ளோம். தற்போது முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2
வருடங்களில் இந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க பட்டு இதுவரை யாரும் செய்யாத அளவிற்கான பணிகள் செய்யப்பட்டுள்ளது. பழைய விசைத்தரி இயந்திரங்களை எடுத்துவிட்டு ஏர்ஜெட் இயந்திரங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.இப்போது கோவையில் 12 ஏர்ஜெட் இயந்திரங்கள் இருக்கின்றது.மேலும் 12 ஏர்ஜெட் இயந்திரங்கள் கூடுதலாக அமைக்கபட இருக்கின்றது.உற்பத்தியை பெருக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏர்ஜெட் இயந்திரம் அமைப்பதோடு அந்த இயந்திரத்திற்கு தேவையான மின்சாரத்தை சோலார் மூலம் பெற உள்ளோம். கடன் வாங்கி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், 25 ஆண்டுகளுக்கு உத்திரவாதம் கொடுக்கின்றனர். கூடுதல் இயந்திரங்கள் மூலம் வரும் உற்பத்தி லாபத்தை கொண்டு 5ஆண்டுகளுக்கு கடன் கட்டினால் அதன் பிறகு மின்சாரம் செலவு இல்லாமல் 15 ஆண்டுகளுக்கு லாபமாக இருக்கும். இதன் மூலம் வருங்காலத்தில் இந்த துறை லாபம் இருக்கும் துறையாக மாறும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 18 ஸ்பின்னிங் மில்களில் இருந்தது.இதில் 12 மூடப்பட்டு உள்ளது. 6 மில்கள் தான் தற்போது இயங்குகின்றது. அதுவும் தமிழக முதல்வர் ஆட்சிபொருப்பு ஏற்கவில்லை என்றால் அந்த 6 மில்களும் மூடப்பட்டிருக்கும்.தற்போது அந்த மில்களும் கொஞ்சம் கொஞ்சமாக லாபத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
நம்மிடம் இயங்காமல் இருக்கும் 12 மில்லிற்கு மட்டும் 486 ஏக்கர் நிலம் இருக்கிறது. மணல்மேட்டில் உள்ள மில் 20 வருடமாக மூடி இருக்கிறது. 34 ஏக்கர் நிலம் அதற்கு இருக்கின்றது. அதை மினி ஜவுளி பூங்கா போன்று என்ன பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டோம். 5தேசிய பஞ்சாலை கழக ஆலைகள் மூடி இருக்கிறது.
கோவையில் முக்கிய இடத்தில் 2 உள்ளது.அதை நாம் எடுக்க முடியாது. தற்போது நமது துறை மூலம் என்ன செய்ய முடியுமோ அதை மிக சிறப்பாக செய்கிறோம். மொத்தமாக 125 லட்சம் பேல் பஞ்சு தமிழகத்திற்கு தேவை. 15 லட்சம் பேல்கள் இங்கு உற்பத்தியாகின்றது. காட்டன் கார்ப்பரேசன் பஞ்சு எல்லாம் வடமாநிலங்களில் உள்ள குடோனில் இருந்து வருகின்றது. மேலும் தென்னிந்திய பஞ்சாலை சங்கம் உள்ளிட்ட சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.
அப்போது வடமாநிலம் சென்று பஞ்சு வாங்கி வருவதால் அதிக செலவு ஏற்பட்டு வருவதாகவும், தமிழக அரசால் விதிக்கப்படும் செஸ் வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவை முதல்வர் பரிசீலனை செய்து உடனடியாக நீக்கினார். ஆனால் காட்டன் விலையை நாம் நிர்ணயம் செய்ய முடியாது, அது மத்திய அரசின் கையில் உள்ளது.
காட்டன் கார்ப்பரேசன் இந்தியா போல காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு என ஆரமிக்கும் திட்டம் இருக்கிறது. ஆனால் போதிய நிதி இல்லாததால் துவங்குவதில் காலதாமதம் இருக்கிறது. அது அமைந்து விட்டால் பருத்தியை நாம் வாங்கி இருப்பு வைத்து பருத்தி விலையை நம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
அதே போல மில்களில் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவு உள்ளது குறித்த கேள்விக்கு, தமிழக தொழிலாளர்கள் வருவதில்லை,அனைவருக்கு இங்கு பணி வழங்கப்படுகிறது. இரயில்வே துறையில் இங்குள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், மொழி தெரியாதவர்கள் தமிழகத்தில் பணிக்கு வைத்துள்ளது போல இல்லாமல், அனைவருக்கு வேலை வழங்கப்படுகிறது என அமைச்சர் காந்தி தெரிவித்தார்.