தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு போக்குவரத்துகழக கங்களில் உள்ள 1000 பழைய பஸ்களை புனரமைத்து புதிதாக கூண்டு கட்டும் பணி தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த புள்ளியின்அடிப்படையில் தனியார்
கூண்டு கட்டும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. அதன்படி முதல் கட்டமாக அரசு போக்குவரத்து கழகங்களின்125 பழைய பேருந்துகள் முறையே கரூரில் உள்ள ஜெமினிகோச் நிறுவனத்தினரிடம் 43ம், மதுராந்தகம் ஆரோகோச் நிறுவனத்திடம் 25ம், விராலிமலை குளோபல் டிவிஎஸ்.நிறுவனத்திடம் 32ம், பெங்களூர் கேஏம்எஸ்.கோச் நிறுவனத்திடம் 25ம், ஒப்படைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது. இதனை தொடர்ந்து
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை குளோபல் டிவிஎஸ் நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்ட 32 பேருந்துகளின் கூண்டு கட்டும் கட்டுமான பணிகளையும், அவற்றின் தோற்ற பொழிவு உள்ளிட்ட பணிகளை மாநில போக்குரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர்களிடையே பேசிய மாநில போக்குவரத்து கழக அமைச்சர் சிவசங்கர்ஒட்டுனர்கள் நடத்துனர்கள் பயணிகளின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் பேருந்துகளின் கட்டுமான பணிகளில் சில மாற்றங்களை மேற் கொள்ளுமாறு கூறினார். மேலும் கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்து பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினார். அமைச்சருடன் விராலிமலை குளோபல் டிவிஎஸ். கூண்டு கட்டுமான நிறுவன முதன்மைஅலுவலர் சீனிவாசன், துணைத்தலைவர்(இயக்கம்) ஆர்என்.லிங்கம், கும்பகோணம் அரசுப்போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர்கள் திருச்சிஎஸ்.சக்திவேல், புதுக்கோட்டை கே.குணசேகரன் உடன் இருந்தனர்.