ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா
பகல் 10 இரண்டாம் நாள் விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் விழா ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் பிரதீப் குமார், எம்.எல்.ஏ. பழனியாண்டி, பகுதி செயலாளர் ராம்குமார், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, மண்டல இணை ஆணையர் செல்வராஜ் ஆகியோர் வந்திருந்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு,17 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்புக்கு இரண்டு லட்சம் பக்தர்கள் வருவார்கள் .
பக்தர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு, 5,500 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
மேலும், 12 இடங்களில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் 20 என, 100 பேர் சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை, திருப்பதி கோயில் போல ஒரு முன்மாதிரி கோயிலாக உருவாக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. முதல்வரும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
வைகுண்ட ஏகாதசி பெரு விழாஅரசு விழாவாக நடத்தப்படுமா? என்ற கேட்கிறீர்கள்.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள அதிகாரிகள் விழாவில் பங்கேற்கின்றனர்.
எனவே மனதளவில் இதை அரசு விழாவாக ஏற்றுக் கொள்ளலாம் .
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா, திருவண்ணாமலை மகா தீப விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியபோதும், பக்தர்களுக்கு சிறிய அசெளகரியம் ஏற்படாத வகையில் விழாவை நடத்தினோம். அதைபோலவே, ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவையும் சிறப்பாக நடத்துவோம் .
ஏழை எளிய பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு தரிசன கட்டணத்தை ரூபாய் 4000 ஆக உயர்த்தியதன் வாயிலாக அந்த பக்தர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம்.
கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து தமிழக மக்களை முன்கூட்டியே காப்பாற்றுகின்ற ‘வருமுன் காக்கும் அரசாக’ முதல்வர் ஸ்டாலின் அரசு இருக்கிறது. கோயில்களில் கொரானா கட்டுப்பாடுகள் குறித்து, சூழ்நிலைகளை பொறுத்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர்சேகர்பாபு கூறினார்.