அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி கரூர் மாவட்டம், ஆத்தூர் பிரிவு அடுத்த சுந்தரம் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் விநாயகர் மற்றும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து 108 பெண்கள் கலந்து கொண்டு, 108 எவர்சில்வர் தட்டுகளில் 324 அகல்
விளக்குகளில் எள் எண்ணெய் ஊற்றி, திரியிட்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
மேலும், கோவில் வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டும் என்று, GET WELL SOON MINISTER VSB என்ற ஆங்கில வாசகத்துடன் 500-க்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை கொண்டு தீபம் ஏற்றப்பட்டது. மேலும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில், திமுக நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.