ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் நபார்டு வங்கி திட்ட உதவியுடன், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில், ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதியை திடீரென ஆய்வு செய்த, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி நிருபர்களிடம் கூறியதாவது…. தஞ்சாவூர் அம்பேத்கர் பள்ளி மாணவர்கள் விடுதியும்,குந்தவை நாச்சியார் கல்லூரியில் மாணவியர் விடுதியும் ஆய்வு செய்யப்பட்டது. குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவியர் விடுதியில் 50 பேர் தங்கும் அளவிற்கு கட்டப்பட்டு வருகிறது.பள்ளி விடுதியில்,குறைவாக மாணவர்கள் இருந்தால்,கல்லூரி மாணவர்களும் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.தமிழக முழுவதும் உள்ள 336 விடுதிகளுக்கு,கடந்த ஆண்டு 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.விடுதிகளில் உணவுகள் தரமாக இல்லை என புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தட்கல் மூலம் கடந்த முதல் நிதியாண்டில், 837 விவசாயிகளுக்கும்,கடந்தாண்டு ஆயிரம் விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.வேங்கை வயல் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.அத்துடன் சிபிசிஐடி விசாரணை,நீதிபதி சத்தியநாராயணன் விசாரணையும் நடைபெற்று வருகிறது.விழுப்புரத்தில் கோவில் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்பதால் கோவில் பூட்டப்பட்டுள்ளது. விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தஞ்சையில் புதியதாக கட்டப்பட்டு வரம் மாணவியர் விடுதியை அமைச்சர் கயல்விழி ஆய்வு…
- by Authour