கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மஞ்ச நாயக்கனூர் கிராமத்தில்,பகுதியில் கூலி தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர் இங்கு அரசின் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது,மலைவாழ் மக்கள் குழந்தைகள் தினசரி அரசு பள்ளியில் வாகனங்கள் மூலம் 20 குழந்தைகளை அழைத்து வந்து பள்ளிக்கு படிக்க வருகின்றனர்,
இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தப்பட்டு வருகிறது, 120குழந்தைகளுக்கு ஐந்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர், கருங்கல்லால் கட்டப்பட்ட இப்பள்ளியானது இரண்டு தலைமுறைகளை கடந்து பள்ளி செயல்பட்டு வருகிறது,
கடந்த 2007 ம்ஆண்டு பள்ளியின் மேற்கூரைகள் புனர்பிக்கப்பட்டுள்ளது, புதிய கட்டிடம் கட்ட பழைய கட்டடத்தை இடித்து இரண்டு வகுப்பறைகள் கட்ட உள்ளனர்,இப்பள்ளியில் நான்கு அறைகள் மட்டுமே உள்ளது இதில் ஒவ்வொரு பள்ளி அறையிலும் மூன்று வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது இதனால் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, அவல நிலை உள்ளது
அதேபோல் குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் இல்லாததால் பள்ளியில் முன்புறம் உள்ள சிமெண்ட் தரையில் விளையாடி வருகின்றனர்,புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு நவீனமயமாக கட்டடம் கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கும் தமிழக பள்ளி கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கவனத்தில் எடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.