டெல்டா விவசாய பாசனத்திற்காக ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட நீர் கல்லணை வந்தடைந்து, ஜூன் 16 ம் தேதி திறந்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே உம்பளாப் பாடி ஊராட்சி மேட்டு தெரு வில் காவிரி – அரசலாறு தலைப்பில் ரூ 40 கோடி திட்ட மதிப்பீட்டில் ஆற்றில் இருந்து வாய்க்கால் களுக்கு நீரை பிரித்து தர புதிதாக நீர் ஒழுங்கி கட்டி முடித்து பயன்பாட்டிற்காக இருந்த நிலையில், வந்தடைந்த காவிரி நீரை வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. இதில் பொதுப் பணித் துறை உதவி செயற் பொறியாளர் முத்துமணி உள்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.