Skip to content
Home » திருச்சி அருகே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…..

திருச்சி அருகே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…..

  • by Authour

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் அருகே நெய்குப்பை மாதா கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான தமிழ்ச்செல்வன். இவருடைய தந்தை காலமாகிவிட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்துள்ளார். தமிழ்ச்செல்வனுக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுவன் தமிழ்செல்வன் மனமுடைந்துநேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .பின்னர் வீட்டிற்கு வந்த அவரது தாய் சிறுவன் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சிடைந்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதூர் உத்தமனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினார்.

இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *